செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி ஆகும்.

இதனை பெரும்பாலும் கிராமங்களில் சமையல் எண்ணெய் எடுக்க பயன்படுத்துகின்றனர். செக்கானது மரத்தாலோ கல்லாலோ செய்யப்பட்டிருக்கும். மாடு முதலான விலங்குகள் ஆரம்பத்தில் பயன்பட்டது. ஆயினும் தற்காலத்தில் சுவட்டு எரிபொருள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் செக்குகள் நடைமுறையில்  உள்ளன.

மாடுகளால் இழுக்கப்படும் செக்கின் அடிமரம் பொதுவாக புளிய மரத்தின் தண்டில் இருந்து செய்யப்படுகிறது. அத்துடன் கடையும் அச்சு முதிரை பாலை மரங்களில் இருந்து செய்யப்படுகிறது. வாகை மரமும் புழக்கத்தில் இருப்பதாக அறிந்தோர் செய்திகள் அளிக்கின்றனர்.
 .
செக்கில் எண்ணெய் பிழியும் தமிழர் மரபு 

1950 ஆம் ஆண்டிற்கு முன்பு எண்ணெய் பிழிய செக்கு என்ற கருவியே பயன்பாட்டில் இருந்தது. கடந்த பல தாசப்தங்களாக  மரச்செக்குகளில் தான் எள்ளை போட்டு ஆட்டி எண்ணெயை பிழிந்து எடுத்து மக்களுக்குத் தந்தார்கள். மதுரையில் 120 ஆண்டுகளாக செக்கில் எண்ணெய் பிழிந்து தந்த வியாபார நிறுமங்கள் உண்டு.

செக்கில் இடப்படும் எள்ளுடன் கருப்பட்டியை சேர்த்து சிறிதுசிறிதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளை சுழல வைப்பதன் மூலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியே வரும்.

மரச்செக்கிலிருந்து பிழியப்பட்டு வரும் எண்ணெயை பித்தளையால் ஆன பாத்திரத்தில் தான் வடித்தெடுப்பார்கள். அதுவும் குறிப்பாக இந்த எண்ணெயை எடுத்து ஊற்ற பயன்படும் பித்தளை பாத்திரமாக இருக்கும் .

இதன் அறிவியல் தத்துவார்ந்த ரீதியாக இந்த பயன்படுத்தும் முறை நிருபிக்க விட்டாலும் மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து ஆட்டப்பட்ட எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணையை, பித்தளையில் ஈயம் பூசப்பட்ட பாத்திரத்தின் மூலம் செக்கிலிருந்து எடுத்து ஊற்றி சில்வர் பாத்திரத்தில் சேமிக்கப்படும் நல்லெண்ணெய்க்கு சில அபாரமான குணங்கள் இருப்பதை நடைமுறையில் தெரிந்து வைத்திருக்கின்றார்கள் பழங்கால எண்ணெய் வியாபாரிகள்.

செக்கு நல்லெண்ணெய்க்கும் பாக்கெட் நல்லெண்ணெய்க்கும் உள்ள வேறுபாடு 

பெரிய பெரிய எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய இரும்பு உலக்கைகளை கொண்டு எள்ளை ஆட்டி எண்ணெய்யை பிழிவார்கள். அப்போது கடுமையான வெப்பம் இந்த உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படுவதுண்டு. அந்த வெப்பத்தால் இயற்கையாகவே நல்லெண்ணெயில் மறைந்திருக்கும் சில அதிசயமான குணசாங்கள் குறைந்து போய்விடும்.

ஆனால் மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து எள்ளை ஆட்டும் போது மரச்செக்கில் அவ்வளவாக வெப்பம் ஏறாது. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் இந்த கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சமமாக்கல் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது.

இதனால் இப்படி மரச்செக்கில் ஆட்டி பிழிந்தெடுக்கப்படும் நல்லெண்லெண்ய்க்கு ஒரு அபாரமான மணமும், குணமும் இருப்பது இயற்கையே" என்றார்.

உரத்த சிந்தனை

ரீபைண்ட் ஆயில் மற்றும் கடைகளில் விற்கப்படும் நல்லெண்ணெய் முதல் அனைத்து எண்ணெய்களில் அதிகம் வருவதும் நாம் சமையலில் பயன்படுத்துவதும் குரூட் ஆயில். தற்போது புதிது புதிதான நோய்களுக்கு இது மிகப்பெரிய காரணமாக இருக்கின்றது.

சூரியக்காந்தியில் இருந்து எண்ணெய் தயாரிக்க பயன்படும் அதன் விளைச்சல் என்பதே மிக சொற்பமான அளவு ஆகும் . இந்தியாவில் சில இடங்களில் பயிரிடப்படும் சூரியகாந்தியால் இந்தியாவில் சென்னை நகரில் குறிப்பிட்ட இடங்களுக்கு கொடுக்க கூட முடியாது என்கின்றார்கள் விவரம் தெரிந்தவர்கள் .

தேங்காயில் இருந்து எடுத்தால்  தேங்காய் எண்ணெய் என்பார்கள்,கடலையில் இருந்து எடுத்தால் கடலை எண்ணெய் என்பார்கள் எள்ளில் இருந்து எடுத்தால் எள்எண்ணெய் என்றுதானே அழைக்க வேண்டும். ஏன் நல்லெண்ணெய் என்று அழைக்கின்றார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் எழும். அதற்க்கு காரணம் அதில் எல்லையில்லா நன்மையைக்கண்டு நல்லெண்ணெய் என்று அழைத்தார்கள் மூத்த குடிகள் .

பெண் குழந்தைகள் பருவமடைந்த நிலையில் அவர்களுக்கு உளுந்தை களியாக கிளறி அதில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட கொடுப்பார்கள். இது இடுப்பு பகுதிக்கு நல்ல வலுவை தரும் என்பார்கள். தற்போது இந்த பழக்கம் எல்லாம் மறைந்து விட்டது. இத்துடன் இந்த செக்கில் பெறப்படும் நல்லெண்ணெயும் சேர்ந்து மறைந்து விட்டது . அதனை மீண்டும் தேடி நிறுவுவது நமது கடமையாக இருக்கின்றது .

நிலக்கடலையின் நன்மைகள் :

குழந்தைக்குத் தேவையான உயிர்ச்சத்து தரும் நிலக்கடலை

நிலக்கடலையை பொடியாக்கி அதனுடன் ஆட்டுப்பாலை சேர்த்து இனிப்பு எவ்வளவு தேவையோ அந்த அளவு கருப்புகட்டியும் சேர்த்து காய்ச்சி குடிக்கவும்.

இது கர்ப்பிணிகளுக்கு மிக நல்லது. கர்ப்பக்காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான உயிர்ச்சத்து ஏ-யும், நீரில் கரையக்கூடிய சத்து பி3-யும் அதிகம் கொடுக்கிறது.

டுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். சின்னஞ்சிறிய கடுகில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன.

இதில் உயர்தர சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. வைட்டமின்களும், ஆன்டிஆக்ஸிடென்ட்களும் அடங்கியுள்ளன. கடுகில் உள்ள சல்பர், அப்லோ டாக்ஸின் போன்றவை நச்சுத்தன்மையை நீக்குகிறது.

கடுகு, உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். சமையலில் கடுகைப் பயன்படுத்தும்போது வெடிக்கும். கடுகு வெடித்தால்தான், அதில் உள்ள நறுமண எண்ணெய்கள் வெளியே வந்து, உணவு வாசனையாக மாறும். கடுகு ஒரு சிறந்த எண்ணெய் வித்து. கடுகு எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

கடுகு எண்ணெயைத் தேய்த்துக் குளித்துவந்தால், உடல் வலி நீங்கும். குறிப்பாக, தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும். உடலில் எந்தப் பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து, எண்ணெயில் காய்ச்சி, வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவினால், உடனடி நிவாரணம் கிடைக்கும். எண்ணெயில் வதக்கும் பொருட்களோடு கடுகைச் சேர்ப்பது சுவைக்காக மட்டும் அல்ல, இதனால் உடலும் வலுப்பெறும்.

விஷம், பூச்சிமருந்து, அருந்தியவர்களுக்கு இரண்டுகிராம் கடுகை நீர்விட்டு அரைத்து கொடுத்தால் உடனடியாக வாந்தி ஏற்படும். இதனால் விஷத்தின் தாக்கம் கட்டுப்படும்.

கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது. தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து உட்கொள்ளவேண்டும். பின்னர் ஒருடம்ளர் வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.

அடிபட்டு ரத்தம் ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்றுபோட ரத்தக்கட்டு மறையும். கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்பட்டால் கடுகு பற்று நிவாரணம் தரும். கை, கால்களில் சில்லிட்டு விரைத்து போனால் அந்த இடங்களில் கடுகை அரைத்து பற்று போட வெப்பம் உண்டாகி இயல்பு நிலை ஏற்படும்.

கடுகில் உள்ள பி-காம்ளக்ஸ் வைட்டமின் போலேட்ஸ், நியாசின், தையாமின், ரிபோப்ளோவின், வைட்டமின் பி - 6 போன்றவை அதிகம் காணப்படுகின்றன. கடுகில் உள்ள ப்ளேவனாய்டுகள் உடலுக்கு அதிக நன்மை தருகிறது. கடுகு விதையில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

*********

மரச்செக்கு எண்ணெய் மகத்துவம்...

'வைத்தியருக்குக் கொடுக்கிற காசை, வாணிகருக்குக் கொடுஇது, மரச் செக்கில் பிழியும் எண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட பழமொழி. ‘கண்ட எண்ணெயைப் பயன்படுத்தி, பிணிக்கு ஆளாகி, வைத்தியம் பார்ப்பதைவிட, செக்கு மூலமாக தயாரிக்கப்படும் தரமான எண்ணெயை வாங்கி ஆரோக்கியத்தைப் பேணுவதே மேல்என்பதுதான் இந்தப் பழமொழியின் பொருள்.
நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பர்யமான விஷயங்களைக் கைவிட்டு அனைத்திலும் நவீனத்தை ஏற்பதுதான் நாகரிகம் என நினைக்கிறோம். அதனால் நாம் இழந்தவை, இழந்து கொண்டிருப்பவை ஏராளம். அப்படி இழந்தவற்றில் முக்கியமானது மரச் செக்கில் பிழியும் எண்ணெய்.
மரச்செக்குகளில் ஆட்டிப் பிழியப்படும் எண்ணெய் உடலுக்கு நல்லது. ஆனால், ‘ரோட்டரிஎனப்படும் நவீன எண்ணெய் பிழியும் இயந்திரங்களின் வருகையால் மரச் செக்குகள் வழக்கொழிந்துவிட்டன. மரச் செக்கு எண்ணெயின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள், அது எங்கு கிடைக்கும் எனத் தேடி அலைகிறார்கள். குறிப்பாக, இயற்கை விவசாயத்தைத் தீவிரமாக நேசிப்பவர்கள், தாங்கள் உற்பத்திசெய்த எள், நிலக்கடலை, கொப்பரைத் தேங்காய் உள்ளிட்டவற்றை ஆட்டுவதற்கு மரச்செக்கைத் தேடி அலைகிறார்கள்.

மர செக்கு எண்ணையின் மகத்துவம் - மர செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள்

நல்லெண்ணெய் ,தேங்காய் எண்ணெய் ,விளக்கெண்ணெய் .

ரசாயன கலப்பு உரங்கள் இல்லாமல் இயற்கையான உரங்கள் மூலமாக விளைந்த மூலப்பொருள்கள் கொண்டு செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள்.

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்,நிறமாகவும்,மணமாகவும்இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான். இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில், கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் " " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டுவலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர்.
அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் " என்று சொன்னார்கள்.வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil " என்று அழைக்கிறர்கள்.

தேங்காய் எண்ணெய்
இன்று நாம் அணைத்து விதமான சமையல் விருந்துகளுக்கும் ரீஃபைண்ட் ஆயில் தான் பயன்படுத்துகிறோம்,அனால் இன்றளவும் கேரளா மக்கள் தேங்காய் எண்ணெயைத் தான் சமையலுக்கு பயன்படுதிகின்றனர். அதனால் தான் அவர்களுடைய தலை முடி கரு கருவென்று நீளமாக உள்ளது, ஆனால் அவர்களை விட வும் நமது முடி கருமையாக உள்ளது. ஏனெனில் கிட்டத்தட்ட எழுபது சதவீதம் மக்கள் தலைசாயத்தை உபயோகிகிறார்கள் இன்றைய தமிழ் நாட்டு மக்கள். ஆனால் நாமோ சமையலுக்கு நல்ல மனத்தையும் ,சுவையையும்,ஆரோக்கியத்தையும் கொடுக்கும் தேங்காய்எண்ணையை விடுத்து கண்ட கண்ட எண்ணைகளை நாடி செல்கிறோம். ஆனால் நமது மக்கள் அதிலும் ஒரு இரசாயன கலப்படத்தைச் செய்கின்றனனர்.அது தான் சல்பர். அது ஏன் கலக்குகிறார்கள்- எண்ணெய் விரைவில் கெடாமல் இருக்கவும்.வெண்மை நிறமாக இருக்கவும் , சரி அது நல்லது தானே என்று சொல்லுகிறார்கள் சிலர். ஆனால் அதனால் வரும் தீமையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சல்பர் கலந்த தேங்காய் எண்ணெய் உபயோகிக்கும் போது தலை முடி அதிகம் உதிர்கிறது. மேலும் கெட்டு போன தேங்காயும் சேர்க்கபப்டுவதால் வயிற்று உபாதைகளும் உண்டாகிறது. ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் கொழுப்பு சத்து இல்லாத ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள் எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை. சரி., ரீஃபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போமா..

மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.திரைமறைவில் நடக்கும் இந்தவேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய்" என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

செக்கில் ஆட்டி எடுக்கப்படும் இயற்க்கையான எண்ணெய்யை சூடுப்படுத்தினால்... அது ரசாயன கலவையாக மாறாது. அதன் தாதுப் பொருள்கள் அப்படியே சிதையாமல் நமக்கு கிடைக்கும். எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு 
உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள். ரசாயன பொருட்களால் பாழ்படுத்தப்பட்டு., உடல் ஆரோக்கியத்திற்க்கு அவசியமான பொருட்கள் நீக்கப்பட்ட ஒருதிரவத்தை ரீஃபைண்ட் ஆயில் என்ற பெயரில் விற்பனை செய்ய அரசாங்கமும்., மெடிக்கல் கவுன்சில்களும் எப்படி அனுமதி அளிக்கின்றன...?? நாமும் யோசிக்கும் சக்தியை ஏன் இழந்து விட்டோம்.? 
நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பதினால்மட்டும் தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.

கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குமக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது இந்த ரீஃபைண்ட் ஆயில்.. உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் இயற்கைக்கு மாறுவோம்.

தலைக்கு தினமும் எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

பெரும்பாலானோர் தங்கள் பெற்றோரிடம் தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதால் பல திட்டுகளை வாங்கியிருப்போம். இது பல தலைமுறைகளாக நடக்கும் ஒன்றே. தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதால், பெற்றோர்கள் திட்டுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அதற்கு பின் பல நன்மைகள் அடங்கியுள்ளது. அது அவர்களுக்கு அல்ல, நமக்கு தான். ஆம், தலைக்கு தினமும் சிறிது எண்ணெய் தடவுவதால், தலையில் ஏற்படும் பல பிரச்சனைகளைப் போக்கலாம். அக்காலத்தில் எல்லாம் தினமும் தலைக்கு எண்ணெயை வழிய தேய்த்து வந்ததால் தான், ஆண்களுக்கு வழுக்கை ஏற்படாமல் இருந்தது. ஆகவே ஃபேஷன், ஸ்டைல் என்று சொல்லி தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருந்தால், பின் உங்கள் முடியை மறக்க வேண்டியது தான். அதிலும் கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த எண்ணெய்களை வாங்கி தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெயை தினமும் தேய்த்து வந்தாலே போதும். மேலும் வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் வைத்து குடிப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சரி, இப்போது தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.

நரை முடி தடுக்கப்படும்

இன்றைய இளம் தலைமுறையினருக்கு இளமையிலேயே நரை முடி வருவதற்கு ஒரு காரணமாக தினமும் தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதையும் கூறலாம். ஆம், இதனால் முடிக்கு வேண்டிய வைட்டமின்கள், புரோட்டீன்கள் கிடைக்காமல், நிறத்தை வழங்கும் நிறமியான மெலனின் குறைந்து நரைக்க ஆரம்பிக்கிறது. ஆனால் தினமும் எண்ணெய் தடவி வருவதன் மூலம், முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, நிறமியும் ஊட்டம் பெற்று, முடிக்கு நிறத்தை வழங்கும்.

பொடுகு நீங்கும்

சிலருக்கு தலையில் பொடுகு அதிகம் இருக்கும். அப்படி இருப்பதற்கு ஒன்று ஸ்கால்ப் வறட்சி தான். அதிலும் வறட்சி அதிகமான நிலையில் தான் பொடுகு உருவாகி, பேன் வரத் தொடங்கும். எனவே தினமும் தலைக்கு எண்ணெய் தடவி வந்தால், ஸ்கால்ப்பில் ஏற்படும் வறட்சி தடுக்கப்பட்டு, பொடுகு உருவாவது குறையும்.

பொலிவான முடி

யாருக்கு தான் பொலிவான முடியின் மீது ஆசை இருக்காது. ஆனால் அப்படி முடி பொலிவோடு இருக்க வேண்டுமெனில், முடி ஆரோக்கியமாகவும், எண்ணெய் பசையுடனும் இருக்க வேண்டும். அதற்கு தினமும் முடிக்கு எண்ணெய் தடவி வர வேண்டும்.

முடி உடைவது குறையும்

புரோட்டீனால் உருவாவது தான் முடி. எனவே நல்ல புரோட்டீன் நிறைந்த உணவை அன்றாடம் உட்கொள்வதோடு, தினமும் மயிர்கால்களுக்கு ஊட்டமளிக்கும் வகையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். இல்லாவிட்டால், தலை சீவும் போது முடி எளிதில் உடையக்கூடும். அதிலும் தலைக்கு பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் ஆயில் போன்றவற்றை தடவி வாரம் இரண்டு முறை மசாஜ் செய்து குளித்து வந்தால், முடிக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, இடையிடையே முடி உடைவது தடுக்கப்படும்.

மனதை ரிலாக்ஸ் செய்யும்

வாரம் 1-2 முறை ஆயில் மசாஜ் செய்து வந்தால், அதிலும் நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து குளித்து வந்தால், மூளையில் உள்ள நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, மூளையின் இயக்கம் அதிகரித்து, ரிலாக்ஸாக இருப்பதை நன்கு உணரலாம்.

முடி வளரும்

தற்போது பலரும் முடி கொட்டுகிறது என்று பலரும் சொல்வதற்கு காரணம் தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது தான். தலைக்கு தினமும் எண்ணெய் வைத்து வந்தால், முடியின் வளர்ச்சிக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் கிடைத்து, முடி உதிர்வது குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் தினமும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது, தலைக்கு மசாஜ் செய்வது போன்றது. இதன் மூலம் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்கள் ஆரோக்கியமாக இருக்கும்.